2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தமிழ்நாடு சென்ற அமைச்சர் தயாஸ்ரித திசேராவுக்கு கறுப்புக்கொடி;11பேர் கைது

Super User   / 2010 மே 28 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா சென்றுள்ள அமைச்சர் தயாஸ்ரித திசேராவுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற "நாம் தமிழர்" இயக்கத்தினர் 11பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசின் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சரான தயாஸ்ரித திசேர மற்றும் அவரது குடும்பத்தினர் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்காக நாகை மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர்.  

இதனிடையே, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒரு சில அமைப்புகள் சார்பில் நாகை புத்தூர் அண்ணா சிலை, நாகை - வேளாங்கண்ணி ரயில் நிலையம், பரவை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் கறுப்புக் கொடி காட்ட திட்டமிடப்பட்டுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளனது.

இதனையடுத்து, அந்த பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்குவந்த அமைச்சரின் காரை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் திடீரென கறுப்புக் கொடியுடன் மறிக்க முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு கறுப்புக்கொடி காட்ட முயன்ற  11பேரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவரது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்

  Comments - 0

  • xlntgson Saturday, 29 May 2010 10:14 PM

    சிலகாலத்துக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததுமே கலைஞர் கருணாநிதி தன்னால் வரமுடியாதிருக்கிறது என்று கவலைப்பட்டு தனது மகளை அனுப்பிவைத்தார், குழுவாக! அவர்கள் இங்கு வந்திருந்தபோது யார் கருப்பு கொடி காட்டினார்கள்? அவர்களை எதிர்க்கும் ஜாதிகஹெலஉறுமயவின் உறுப்பினர்கள் கூட மிக நாகரிகமாக வரவேற்று உபசரித்தனர். அதுபோல் தமிழகத்திலும் நடந்து கொண்டால் நல்லது. நடந்த விடயங்களுக்கெல்லாம் ஒரு தனிமனிதர் பொறுப்பாக மாட்டார், முன்னாள் சபாநாயகரையும் கூட செருப்புவீசியதாக, கூட்டத்தில் யாரோ அதை செய்துவிட்டதாக பொலீஸ் கூறியது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--