2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இலங்கை அரசு இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக பிலிப் அல்ஸ்டன் குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி  பிலிப் அல்ஸ்டன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெயிலிமிரர் இணையதளத்திற்கு மின்னஞ்சல் மூலம்  வழங்கியிருக்கும் செவ்வியிலேயே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலிறுத்தியிருப்பதாகவும்  பிலிப் அல்ஸ்டன் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை மற்றும் மேற்படி ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பிலும் திருப்தியடைய  முடியாது எனவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டார்.
 
  Comments - 0

  • xlntgson Wednesday, 16 June 2010 10:00 PM

    இலங்கை பிரச்சினைக்கும் பாலஸ்தீன பிரச்சினைக்கும் என்ன ஒர்ற்றுமையைக் காணுகிறார் இவர்? அவ்வாறு இணைத்து பேசுவதன் மூலம் இஸ்ரேலின் அட்டூழியங்களை நியாயப்படுத்தவேண்டும் நீங்கள் அப்போது நாங்கள் இந்த குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தமாட்டோம் என்ற மறைமுகமான அழுத்தமா, மிரட்டலா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--