2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘இளையவர்களின் மரணத்துக்கு விபத்துகளே காரணம்’

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்த வருமானத்தைக்கொண்ட நாடுகளிலேயே, வீதி விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமென, உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

10 - 19 வயதுக்கு இடைப்பட்ட இளையவர்கள், வீதி விபத்துகளாலேயே அதிகளவில் உயிரிழக்கிறார்கள் என்றும் 2015ஆம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் இளையவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளையவர்களின் மரணத்துக்கான 10 காரணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள குறித்த ஸ்தாபனம், சுவாசக் கோளாறு மற்றும் தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X