2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இஸ்லாமிய அறிஞரான டாக்டர் ஸாகீர் நாயிக் இன்று இலங்கை விஜயம்

Super User   / 2010 மே 23 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச புகழ்மிக்க இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகீர் நாயிக் இன்று மாலை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ஜம் இய்யதுஷ் ஷபாபின் ஏற்பாட்டில் கொழும்பு சுகதாச வெளியரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மார்க்க சொற்பொழிவில் இவர் உரையாற்றவுள்ளார்.

மத ஒப்பீட்டுத்துறை ஆய்வுத்துறை நிபுணரான  டாக்டர் ஸாகீர் நாயிக் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் என்ற பட்டியலில் 82ஆவது இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.

இதேபோன்று, இந்தியாவின் தலைசிறந்த 10 மார்க்க அறிஞர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்திலுள்ளார். (R.A)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--