Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசா காலாவதியான நிலையில், சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் காரணமாக, அந்நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
32 இலங்கையர்கள் இவ்வாறு சட்டவிரோதமாகத் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கைப் பணியாளர்கள் சார்பாக பிணை வழங்கியுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். விதானகே தெரிவித்தார்.
6 தொடக்கம் 8 மாத கால அடிப்படையில், இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றவர்கள், விசா காலாவதியான பின்னரும் நாடு திரும்பாமல் உள்ளதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
17 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago