2021 மே 15, சனிக்கிழமை

உள்ளூராட்சி எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக்கு காலம் நீடிப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்காகவும் அது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்காகவும்  வழங்கப்பட்டிருந்த கால எல்லை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் விசேட வேண்டுகோளுக்கிணங்கவே, இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவிடம் இது தொடர்பான முறைபாடுகளையும் யோசனைகளையும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி வரை  சமர்ப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  

எனினும், மக்களினதும் அரசியல் கட்சிகளினதும் வேண்டுகோளுக்கணங்கவே இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். 

இக்குழு, தனது அறிக்கையை 2016, ஜனவரி மாதம் 15ஆம் திகதியளவில் அமைச்சரிடம் சமர்பிக்கும். அதன் பின்னர், எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மீண்டும் மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்தவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .