2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

‘உஷார் நிலையில் இலங்கை’

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு அல்லது அதன் பிரிவுகள் உருவாகும் நிலைமை ஏற்படாதிருக்கும் வகையில், இலங்கைப் பாதுகாப்புப் படைகளும் புலனாய்வு நிறுவனங்களும் முழு ஊஷார் நிலையில் உள்ளன என,  பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய அமெரிக்காவின் 2016ஆம் ஆண்டுக்கான நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் 36பேர் சிரியாவுக்குச் சென்றனர் என்றும் அவர்களில் சிலர், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் சேர்ந்தனர் என்றும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டிருந்தார். எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ் அல்லது ஆயுதக்குழுக்கள், இலங்கையில் பௌதிகரீதியாக இருக்கவில்லை எனவும் கடந்த வருடம் ஜனவரி மாதம் கூறினார் என, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2016இல், அமெரிக்காவுடனான, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயிற்சி மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஆனால், இருபக்க பாதுகாப்பு உறவு தொடர்ந்து வளர்ந்தது என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாத்தல் தொடர்பாக, இலங்கை விமானப் படையுடன் இணைந்து, ஓர் உயர்நிலை அமெரிக்க பி-8 கடல் காவல் விமானம் பயிற்சியை நடத்தியது. 

இலங்கையூடாக வேறுநாடுகளுக்குள் ஊடுருவக்கூடிய வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளைப் பிடிக்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆற்றலை இந்தப் பயிற்சி அதிகரித்தது. 

இலங்கையின் பாதுகாப்புச் சேவைகள், எல்.ரீ.ரீ.ஈயின் மீள் வருகையின் மீது கவனத்தைச் செலுத்துவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. 

இலங்கையர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் அல்லது வேறு பயங்கரவாதக் குழுக்களுடன் இணைதல் போன்ற, புதிதாக உருவாகும் பிரச்சினைகள் மீதான அரசாங்கத்தின் கவனம், அரசாங்கத்தை, நெகிழ்ச்சித் தன்மையுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்க வைத்துள்ளது. 

சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்இல், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த நல்ல கல்வியறிவுடைய 32 இலங்கை முஸ்லிம்கள் சேர்ந்துவிட்டனர் என, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ, நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கூற்று, இலங்கை முஸ்லிம்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .