George / 2016 ஜூலை 13 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றரை மாதங்களுக்குள் இரண்டு ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலுக்கு ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் 2ஆம் திகதி நீர்கொழும்பில் ப்ரடி கமகே, ஜூலை 12ஆம் தினதி காலி நெலும் பிரதேசத்தில் சத்ஹண்ட ஊடகவியலாளர் தயா நெத்தசிங்க ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் உள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிலவிய நிலைமை மீண்டும் தலையெடுத்துள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக்குழு அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago