2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘எதிர்வு கூறமுடியாது’

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

நவீன தொழில்நுட்ப உபகரணத்தின் உதவியுடன்கூட சில மணித்தியாலங்கள் அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகவே மழை வீழ்ச்சி குறித்து எதிர்வு கூறமுடியும். மழை ஆரம்பித்த பின்னர்தான் மேகத்திலிருந்து பெய்யும் மழையின் அளவுகுறித்துக் கூறமுடியும். இரண்டு நாட்களுக்கு முன்னதாக மழை குறித்து அறிந்து, எதிர்வு கூறக்கூடிய வசதிகள் எந்த நாட்டிலும் இல்லை. அத்துடன், இலங்கையின் அந்த உபகரணம் இல்லை” என, வளிமண்டளவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். 

“எம்மிடம் உள்ள முறையை பயன்படுத்தி ஒரு நாளுக்கு முன்னதாகவே, சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தோம். எனினும், 500 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, அவர் இதனைக் கூறினார். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்து தெரிவிக்கையில்,   “மே மாத இறுதிப்பகுதியில் நாட்டில் பாரிய அனர்த்தமொன்று ஏற்படுமென்று, அரசாங்கம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த அனர்த்தம் பற்றி முற்கூட்டியே அறிந்துக்கொள்ள தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் நாட்டில் இல்லை” என்றார்.  

“எமது நாடு, தீவு என்பதால், பல்வேறு காலங்களிலும் இயற்கையின் சீற்றத்துக்கு உள்ளாகும் நிலை காணப்படுகிறது. எனினும், கடும் வரட்சி நிலவிய நிலையில் தீடிரென கடும் மழை பெய்யும் என, நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. 

“இயற்கை அனர்த்தங்களை உடனடியாக இனங்கண்டுக்கொள்ள, குறிப்பாக மழை வீழ்ச்சி தொடர்பில் உரிய தகவலை அறிந்துக்கொள்ள எம்மிடம் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லை. அதனை ஏற்றுக்கொள்கிறோம். 

மழை தொடர்பில் அறிந்துக்கொள்ளக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்துடனான கருவியை ஜப்பானிடம் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதிப் பெற்று அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

“கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி ஏற்பட்டிருந்ததால், குடி நீர் விநியோகத்துக்காக 300 பௌசர்களை இறக்குமதி செய்திருந்தோம். இந்நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வௌ்ளப்பெருக்கு காலத்தில் மக்கள் மீட்பு பணிகளுக்காக 100 படகுகள் கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்படும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X