Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ-9 பிரதான வீதியில் மாங்குளம் பிரதேசத்தில் வானொன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதென, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஏ-9 வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்துள்ளது. அதனை கவனிக்காத வான்சாரதி, லொறியின் பின்னால் மோதியமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வானின் சாரதி, அஜாக்கிரதையாக வானை செலுத்தியமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதென தெரிவித்த மாங்குளம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .