2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்?

Super User   / 2010 மே 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வாறான  மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும், எவ்வாறு கட்சிக்குள் உள்ளக தேர்தல் ஒன்றை நடந்துவது என்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைமைத்துவத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்த உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டர்.

எவ்வாறான  மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் என்று தமிழ்மிரர் வினவியபோது, அது சம்பந்தமாக தற்போது எதுவும் அது சம்பந்தமாக கூறமுடியாது என்றார் கபீர் ஹாசிம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எவ்வாறான மறுசீரமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு செயற்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட உப குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் ஒருவராவர்.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--