2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

நிபுணர் குழு அமைக்கும் திட்டத்தில் மாற்றமில்லை-ஐக்கிய நாடுகள் சபை

Super User   / 2010 மே 19 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு உருவாக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் உண்மையை கண்டறியும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், குறித்த நிபுணர்கள் குழுவின் நோக்கங்களை நிறைவேற்றாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 
எனவே, நிபுணர்கள் குழுவின் உருவாக்கம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நிபுணர்கள் குழு உருவாக்கும் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கைவிடவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையக அதிகாரி சொயிஸ் சொங் தெரிவித்துள்ளார்.
 
பான் கீ மூனின் அரசியல் பிரதிநிதியான லியென் பெஸ்கோவை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைக்க பான் கீ மூன் திட்டமிட்டுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியவுடன் பெஸ்கோவின் விஜயம் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனாதிபதியின் "உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கும்", பான் கீ மூனின் "நிபுணர்கள் குழுவிற்கும்" இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாகவும் சொயிஸ் சொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எவ்வாறான ஆணைக்குழுக்களையும் உருவாக்க முடியும் எனவும், அவை நிபுணர்கள் குழு நியமனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்தனைப் போன்று ஜனாதிபதி ஆணைக்குழுவினை நிறுவியமை வரவேற்கத்தக்கது எனவும் சொயிஸ் சொங் பாராட்டியுள்ளார்.

  Comments - 0

  • sheen Thursday, 20 May 2010 10:13 PM

    அதனால் என்ன நடந்து விடும்? காப்பாற்றுவதென்றால் அப்போதே செய்திருக்கலாமே ஒரு வருடம் கழித்து என்ன கண்துடைப்போ இது, யாரை மிரட்டவோ என்ன சாதித்துக்கொள்ளவோ? இலங்கையில் மீள கட்டுமான உதவி பண உதவி செய்ய சீனாவுக்கு இந்தியாவுக்கு இடம் இல்லாமல் எல்லாம் ஐரோபிய யூனியன் அமெரிக்க கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மட்டுமே கொடுத்தால் பழைய சங்கதிகளை எல்லாம் தோண்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்! இலங்கை கோஷ்டி சேர வேண்டும் மேற்கத்திய நாடுகளுடன் கம்யூனிஸ்ட் நாடுகளை புறக்கணித்து ஒரு தலைப்பட்சமாக அமெரிக்க பந்தமாகிவிட !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .