Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கராஜா வனத்தில் காணப்பட்ட ஒரேயொரு வௌ்ளை எருமை இன்று (11) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக, வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் இந்த எருமை விழுந்துக் கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகைத் தந்த அதிகாரிகள் எருமையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த வௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் குறித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
8 minute ago
10 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
10 minute ago
37 minute ago