2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

‘கோட்டாவுக்கு போட்டால், போட்டுத் தள்ளுவார்’

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வாக்கு போட்டால், அவர் எம்மையும் போட்டுத் தள்ளுவார் என்று, தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு, சஜித்தே சரியான தெரிவு என்றும் கூறினார்.

வவுனியா, திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில், இன்று (08), கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

வாக்களித்த மக்களுக்கு, நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற தெளிவான ஒரு நிலைப்பாட்டை கொண்டவரே சஜித் என்று கூறிய அவர், நாட்டிலுள்ள பல பிரச்சினைகளை மாற்றுவதற்கே, தங்களது ஆட்சியைக் கொண்டு வரவுள்ளதாகவும் கூறினார்.

நாட்டுக்குள், இன,மதவாதம் இருக்க முடியாது என்று கூறிய அவர், நாம் அனைவரும் நண்பர்கள் என்றும்  ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்றும் கூறினார்.  

தமிழ் வேட்பாளர்களிற்கு வாக்களிப்பது, தேர்தலை பகிஸ்கரிப்பது, மக்கள் விடுதலை முண்ணனிக்கு வாக்களிப்பது என்பது கோட்டபாயவை ஆதரிப்பதாகவே அமையும் என்றும் கோட்டாவுக்கு போட்டால், எம்மை போட்டுவிடுவார் என்றும் அவர் கூறினார்.

வெள்ளை வான் வரும் என்றும் கடத்தல் காணாமல் போதல்கள் வரும் என்றும் எனவே ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் சஜித்திற்கு வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .