2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கணேசபுரத்தில் சடலங்கள் கண்டுபிடிப்பு புலிகளின் சீருடையுடன் இன்று அகழ்வு

Super User   / 2010 மே 31 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, கணேசபுரத்தில் மலசலகூடக் குழியிலிருந்து 
ஒரு தொகுதி சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் இன்று அகலப்பட்டன. ஐந்து பொதிகளில் மிக அவதானமாக அடைக்கப்பட்டிருந்த இச்சடலங்களில் சில விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப்பட்டுள்ளன. அத்துடன், காயமடைந்தவர்களுக்கான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பதற்கான தடயங்களும் குறித்த சடலங்களில் காணப்பட்டிருக்கின்றன.

இன்று காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையான 2 மணித்தியாலக் காலப்பகுதியில் இந்த சடலங்கள் அகலப்பட்டுள்ளன. இதன்போது வவுனியா மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி பா.சிறிதரனும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். மிகத் துல்லியமாகவும் மீள எடுக்கக்கூடிய வகையிலும் திட்டமிடப்பட்டு ஒரே குழியில் தனித்தனிப் பொதிகளில் இந்த சடலங்கள் அடைக்கப்பட்டிருந்துள்ளன.

ஒரு வருடங்களுக்கு முன்னர் இவை மேற்படி குழியில் இடப்பட்டிருக்கலாம் என்று சட்ட வைத்திய அதிகாரி தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என அடையாளம் காண முடியாத வகையில் சடலங்கள் உருக்குலைந்துள்ள்ன. 

நீதவான் முன்னிலையில் அகலப்பட்ட இந்த சடலங்கள் தற்போது வவுனியா சட்டவைத்திய அதரிகாரியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்வதற்கு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--