Editorial / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக, புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷிரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன, அரசாங்கத்திலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் அணியின் எம்.பியுமான, சுசில் பிரேமஜயந்த ஆகியோரே மேற்கண்டவாறு கூட்டாக வலியுறுத்தினர்.
பிரபல அமைச்சர்கள் இருவர், கிங் - நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் பாரிய ஊழல் மோசடியை செய்துள்ளதாக ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டிய பிரேமஜயந்த எம்.பி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த இருவரையும் கண்டறிய வேண்டுமெனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பந்துல எம்.பி, இந்த வருடத்தின் இறுதியில் ஓர் அமெரிக்க டொலரின், இலங்கை ரூபாயின் பெறுமதி 200 ரூபாயாக உயர்வதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தடுக்கவே முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான பொருளாதார கொள்கைகளே நாட்டில் நடைமுறைப்படுத்தப்படு -வதாகவும், இதனால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago