2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

கனகராசா சரவணன்   / 2017 ஜூலை 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரையில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை, புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய கந்தையா விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில், உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கதவைத் தட்டும் சத்தம் கேட்மையால், கதவை குறித்த நபர் திறந்தபோது, அவர் மீது  ஒருவர் கத்துக்குத்துத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலில் படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .