Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 15 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என, அந்த நிறுவனம் தற்போது தமக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்திருந்தது.
1 கிலோகிராம் பிரிமா கோதுமை மாவின் விலை 8 ரூபாய் 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரிமா கோதுமை மாவின் புதிய விலை 104.50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதனையடுத்து, இன்று (15) நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இந்த நிலையில், வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிரிக்க பிரிமா நிறுவனம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என, அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பு தொடர்பில் எதிர்ப்பு வெளியிட்டனர்.
அத்துடன், கோதுமை மாவின் விலையை அதிரிக்க நுகர்வோர் அதிகார சபையின் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்றும் அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்தது.
அத்துடன், கோதுமை மாவின் விலையை அதிரிக்க பிரிமா நிறுவனம் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என, அந்த அதிகாரசபை அறிக்கையொன்றை விடுத்திந்தமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago