2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கதிர்காமத்துக்கு ஜனாதிபதி விஜயம்

Niroshini   / 2016 ஜூலை 11 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காம புண்ணிய பூமிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.

இதன்போது, கிரிவேஹெர ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்தித்து நலன் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து கிரிவேஹெரவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
மகா சங்கத்தினர் முன்னிலையில் பஞ்சசீலம் அனுஷ்டிக்கப்பட்டதன் பின்னர் கதிர்காம மகா தேவாலய பூமியில் உள்ள ஏனைய தேவாலயங்களையும் வழிபட்ட ஜனாதிபதி, கதிர்காம தேவாலய பூமி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மின் விளக்கேற்றி பிரகாசிக்கச் செய்தார்.

புராதன கிரி விகாரையில் மதக் கிரியைகள் நிறைவேற்றியதன் பின்னர் கதிர்காம மகா தேவாலயத்தில் இடம்பெற்ற தேவ பூஜையில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, கதிர்காம தேவாலயத்தின் எசல மகோற்சவத்தின் 06ஆவது நாள் பெரஹரா நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) இரவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .