2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

காரைநகர் சித்தி விநாயகர் ஆலயத்தின் புனர்நிர்மாணப்பணிகள் கூட்டம் நாளை

Super User   / 2010 மே 29 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைநகர்,துறைமுகத்தடி,மாணாக்கை திருவருள்மிகு வல்லவாம்பிகை சமேத சித்தி விநாயகர் ஆலயத்தின் விசேட கூட்டம் நாளை காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

ஆலய பரிபாலன சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டம் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

துறைமுகத்தடி,உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மேற்படி கோவில் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டியுள்ளதாகவும்,அது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகளுக்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--