2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

குருநாகல்,இப்பாகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசல் உடைப்பதற்கான முயற்சி

Super User   / 2010 மே 20 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், இப்பாகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  அம்பம்பொல கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த பள்ளிவாசலை உடைப்பதற்கான முயற்சியில் அப்பிரதேசவாசிகள் சிலர் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

இது சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, இப்பள்ளிவாசலை விஸ்தீரனம் செய்வதற்கான முயற்சியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அப்பள்ளிவாசல் நிர்வாக சபையினர் ஈடுபட்டுவருகின்றனர். எனினும் பிரதேசவாசிகளின் எதிர்ப்பின் காரணமாக விஸ்தீரனம் நடவடிக்கை இடம்பெறவில்லை. 

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை இப்பள்ளிவாசலை விஸ்தீரனம் செய்வதற்கான அனுமதியை இப்பாகமுவ பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார்.

இதற்கினங்க நிர்வாக சபையினர் பள்ளிவாசலை விஸ்தீரனம் செய்யும் நடவடிக்கையில் நேற்று முதல் ஈடுபட்டனர். இதனை அறிந்த பிரதேசவாசிகள் சற்று முன் பள்ளிவாசலைஉடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பின்னர் அது பொலிஸாரின் தலையிட்டை அடுத்து கைவிடப்பட்டதாகவும் இப்பாகமுவயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது சம்பந்தமாக கொக்கரல்ல பொலிஸ் நிலையதிடம் தமிழ்மிரர் இணையதளம் வினவிய போது, இது சம்பந்தமாக முறைப்பாடு கிடைத்ததிற்கினங்க நடமாடும் பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து எந்தவிதமான மேலதிக தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் கொக்கரல்ல பொலிஸார் குறிப்பிட்டனர்.(R.A)
  Comments - 0

  • sheen Friday, 21 May 2010 08:25 PM

    இவ்வாறான பிரச்சினை எங்கு பார்த்தாலும் இருக்கிறது, முஸ்லிம்கள் பொறுத்து போகின்றனர். ஆனால் வேறு சமூகங்களிடையே வன்முறை மிக மோசமாக நடை பெறுகின்றது, உதம்மிட்ட என்னும் இடத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி சர்ச் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது, இராணுவம் பொலீஸ் குவிக்கப்பட்டு தடுக்கப்பட்டாலும் பெருமளவில் சொத்துகள் அழிக்கப்பட்டன, முக்கியமாக வாகனங்கள், இது மிக பழைய செய்தி அல்ல, சிலமாதங்களுக்கு முந்தியது, நீர்கொழும்பிலும் இப்பிரச்சினை உண்டு. இவ்விடயத்தில் பொலீஸ் செயற்பாடு பாராட்டுதற்குரியதே! வாழ்த்துவோம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--