2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கொரோன தாக்கம்: தேர்தலை பிற்போட ஆலோசனை?

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்சம் காரணமாக, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பிற்போட முடியுமா என்பது தொடர்பாக, அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், தேர்தல் ஆணையகத்தில் ஆலோசனை பெற்றுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

எதிர்வரும் காலப்பகுதியில், மக்கள் கூட்டமாக கூடும் நிகழ்வுகளை இரத்து செய்வதற்கு, சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால், தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரியவருகின்றது.

இந்நிலையிலேயே, நிலைமை பாராதூரமானால் தேர்தல் பிற்தள்ளுவது தொடர்பாக ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X