2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கரும்புலித் தாக்குதல் சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று, மறுப்பு தெரிவித்தது.
 
16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நட்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 உறுப்பினர்களைக் கொலை செய்ததாக, மேற்படி இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரியதை அடுத்தே, அவர்களுக்கு பிணை வழங்க நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி மறுப்பு தெரிவித்ததுடன், அவ்விருவரையும் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான்புலி அமைப்பின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் ராசவல்லன் தவரூபன் ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .