2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

’குற்றம் புரிந்தவர்களை இராணுவ வீரர்கள் என்பது பாரதூரமானது’

Kamal   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த வெற்றிக்கு காரணமான இராணுவ வீரர்களுக்கு சகல தரப்பினரும் மரியாதை செய்வர் என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி ஹெக்டர் அப்புஹாமி, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இராணுவ வீரர்களென கருதுவது பாரதூரமானதென்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், இராணுவ வீரர்களை விசாரணை செய்து அவர்களை சிறையிடும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் ஈடுபடவில்லை. யுத்தம் செய்தமைக்காக இராணுவ வீரர்களை கைது செய்யவும் இல்லை. ஆனால், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் சிலரையும் இராணுவ வீரர்கள் என்ற கோணத்திலேயே பார்ப்பது பாரதூரமானதென மக்கள் விளங்கிகொள்ள வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--