Editorial / 2020 ஜனவரி 08 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள்  உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பட்டப்படிப்பிற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் பிட்டவல தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
மிக நுண்ணிய அளவில் இந்தத் துகள்கள் காணப்படுவதால், சில சந்தர்ப்பங்களில் அவை சுவாசத்தினூடாக உட்செல்லக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த இரு வாரங்களாக கொழும்பு நகர வளிமண்டலத்தில் தூசுக்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
எனினும், மழையுடனான வானிலையால் தூசுக்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் 40 தொடக்கம் 60 வரை தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டி தற்போது காணப்படுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கூறியுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago