2021 மே 06, வியாழக்கிழமை

கற்கவே களவெடுத்தேன்: கொள்ளையடித்தவர் வாக்குமூலம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்விகண்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர தான் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவன் எனவும் , அதற்கான கட்டணம் செலுத்தவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கிக்கு வந்த 35 வயதான சந்தேகநபர் கருமபீடத்துக்கு சென்று அங்கிருந்த காசாளரிடம் வங்கி படிவத்தை நீட்டியது மட்டுமன்றி தன்னிடம் றிவோல்வர் இருப்பதாகவும் ,சத்தம் போட்டால் அல்லது அபாய எச்சரிக்கையை ஒலிக்கச் செய்தால் சுட்டுப்போடுவேன் என கூறி 5 இலட்சம் ரூபாவை கொள்ளை அடித்துச் சென்றார்.

இருப்பினும் பணத்துடன் சந்தேக நபர் ஓடும் போது காலி வீதியில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவரை துரத்திப் பிடித்துவிட்டார். கொள்ளை அடித்தவரிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின் மேலதிக விசாரணைகக்காக அவர் இரண்டு நாள் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .