2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர மேயராக மசூர் மெளலானா நியமனம்

Super User   / 2010 மே 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர மேயராக முன்னாள் செனடரும் பிரதி மேயருமான மசூர் மெளலானவை நியமிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுர் பீடம் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

முன்னாள் மேயர் எச்.எம்.எம்.ஹரீஸ் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மசூர் மெளலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பஸீரை பிரதி மேயராக நியமிப்பது என்றும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு, மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி றகீப்பை மேயராக நியமிக்குமாறு கட்சியின் தலமைத்துவத்துவத்திடம் வேண்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

  • pottuvilan Friday, 21 May 2010 04:54 PM

    Why they rejected central committee's appeal? now peoples came to know what is the intent of this appointment.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--