2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சிப் போராட்டத்தில் எக்னலிகொட குடும்பத்தினர் பங்கேற்பு

Editorial   / 2017 மே 30 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்ப உறுப்பினர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் இன்று கலந்து கொண்டனர்.

பிரகீத் எக்னலிகொட, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார். இவர் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்னறலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 100ஆவது நாளை இன்று எட்டியுள்ளது.

இதன்போது, ஏ-9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் பிரகீத் எக்னலிகொடவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X