2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

களனி மாணவர்களுக்கு பல்கலை வளாகத்துக்குள் பிரவேசிக்க தடை

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும் நாளை (29) காலை 8 மணிக்கு முன்னர், விடுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என, பல்கலைக்கழக நிர்வாக சபை அறிவித்துள்ளது.

வார இறுதி முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளோமா, சான்றிதழ் பாடநெறிகள், அது தொடர்பான பரீட்சைகள் அனைத்தும் மீள அறிவிக்கும் வரை இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017/2018 கல்வியாண்டு, நாளையுடன் (29) நிறைவடையும் நிலையில், நாளை காலை 8.00 மணி முதல் ,களனி பல்கலைக்கழகத்தின் தலுகம வளாகம், அனைத்து மாணவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக சி.சி.டீ.வி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 16 பேர் கிரிபத்கொடை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அதில் 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய நான்கு பேரும், மஹர நீதவான் நீதிமன்ற நீதவானால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, களனி பல்கலைக்கழக சி.சி.டீ.வி கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்ட 25 மாணவர்களுக்கு இரண்டு வருடங்கள் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக தொடர்பாடல் மற்றும் ஊடக பிரிவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக சபையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சி.சி.ஏ.வி கமெரா அமைப்பை மீண்டும் விரைவில் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .