2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொழும்பில் இந்து சமுத்திர மாநாடு

Editorial   / 2017 மே 24 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமுத்திர மாநாடு - 2017’ஐ கொழும்பில் நடத்துவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே, இவ்வாறு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   

பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘இந்து சமுத்திர மாநாடு - 2017’, ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு இந்திய மன்றத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மாநாட்டில் வலயத்தனி பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சூழல் காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

30 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளின் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அதிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .