2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கொழும்பு - தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவை; இந்திய மத்திய அரசு தீவிர ஆய்வு

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை செயலாளர் கே.மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே முதல் கட்டமாகவும், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையே இரண்டாம் கட்டமாகவும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது தனியார் கப்பல் நிறுவனங்களினாலேயே நடத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த கப்பல் போக்குவரத்து திட்டத்தில் பயணிப்பதற்கு விசா அனுமதிப்பத்திரம் தேவையா? இல்லையா? என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சே தீர்மானிக்கும் என்றும் கப்பல் போக்குவரத்துத் துறை செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .