2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கொழும்பு மாவட்ட அரச ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்

Editorial   / 2017 மே 31 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் அரச அலுவலர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தல வசதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் பணிபுரியும் அரச அலுவலர்கள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்துக்கு வெளியிலேயே வசித்து வருகின்றனர். அதனால் அவர்கள் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை எதிர்பார்க்கின்றனர்.  

தற்போது, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் காணப்படும் அரச உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களின் ஒரு தொகை, அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் சேவையின் தேவை அடிப்படையில் வேறு அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் போன்ற அதிகாரிகளுக்கு, உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கும் போது குறித்த இல்லங்களில் காணப்படும் குறைப்பாடு பெரிதும் தாக்கம் செலுத்துகின்றது.

அதற்குத் தீர்வாக, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்கு உரித்தான, கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள, இதற்கு முன்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினை முன்னெடுத்துச் சென்ற இடத்தில், 0.284 ஹெக்டேயர் காணிப் பகுதியில், 08 மாடிகளில் 49 வீடுகளைக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான நிதியை 2017 - 2019 கால வரையறையினுள் திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .