2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கே.பி.யை பாதுகாப்பதாக அரசாங்கத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஒரு பயங்கரவாதியாவார். 

இந்நிலையில் கே.பி.க்கு எதிரான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள அரசு, மாறாக அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரன் பத்மநாதன் பல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம்  தவறியுள்ளது எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், அரசாங்கம் குரமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டு, யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் ஒழுக்கத்தை சீர்குலைப்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கமானது குமரன் பத்மநாதனை சிறைச்சாலையில் தடுத்து வைக்கத் தவறியிருப்பதானது வெட்கப்படத்தக்க விடயம் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .