Kogilavani / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஜன சட்டன' பாதயாத்திரையின் இறுதித் தினம் இன்றாகும். கடந்த வியாழக்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை, ஐந்தாவது நாளான இன்று, கொழும்பை வந்தடையும் நிலையில், அதன் இறுதிக் கூட்டம், காலி முகத்திடலில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு காலி முகத்திடல் வரை, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிகப் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாதயாத்திரையை வழிநடத்திச் செல்வதற்கான நடவடிக்கைள் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
பாதயாத்திரையின் இறுதிக் கூட்டத்தை, கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடைக்காத பட்சத்தில், அதனை காலி முகத்திடலில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
மேலதிக பாதுகாப்புத் தேவைப்படுமிடத்து, முப்படையினரையும் களத்தில் இறக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாதயாத்திரை பயணிக்கும் வழிகளில், ஓர் ஒழுங்கை மட்டுமே கடைப்பிடிக்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், நீதிமன்றக் கட்டளைகள் மற்றும் உத்தரவுகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago