2021 மே 06, வியாழக்கிழமை

750 குற்ற சம்பவங்களுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்கு தொடர்பு

George   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பானமுறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய முறைபாடுகள் 725 தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார். நேற்று புதன்கிழமை(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .