2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்

Princiya Dixci   / 2016 மார்ச் 10 , மு.ப. 09:33 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2ஆவது வியாழக்கிழமை 'உலக சிறுநீரக தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம், இன்று வியாழக்கிழமை (10) கடைப்பிடிக்கப்படுகின்றது.

சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகின்றது. 

அவ்வகையில் இவ்வாண்டுக்கான சிறுநீரக தினம் 'ஆரம்பத்திலேயே கவனமாக செயற்படுவதன் மூலம் அனைவரையும் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாப்போம்' (Act Early to Prevent It) எனும் தொனிப்பொருளில் உலகளவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

2006ஆம் ஆண்டில் முதன் முதலாக 66 நாடுகளின் ஒத்துழைப்புடன் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இவ் நாடுகளின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்திருந்தது. 

இதேவேளை, உலக சிறுநீரத தினத்தையொட்டி, கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நிகழ்வொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 1

  • Vignesh Monday, 08 July 2019 02:54 PM

    Super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .