2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சென்னை -யாழ். விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவித்தல்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சென்னை நகரில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு தினந்தோறும் நடத்தப்படும் விமான சேவைகளை இன்று (15) முதல் வரையறுப்பதற்கு குறித்த விமான நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக விமான பயணிகள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் 4 பயணிகள் மாத்திரமே பயணித்தாக விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த இந்திய விமான நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .