2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை

Kogilavani   / 2016 மே 25 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், 'இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில், 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டள்ளன. அதில், கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 பாடசாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பாடசாலைகளை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .