2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் அவசரகால நிலை பிரகடனம்

Super User   / 2010 மே 20 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் ஏற்படக்கூடிய  வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அடை மழை மற்றும் கடும் காற்று காரணமாக குறித்த பகுதியில் முற்றாக வீடுகள் சேதமடைந்திருப்பதாக நுவரெலியா அரசாங்க அதிபர் டி.குமாரசிறி தெரிவித்தார். இந்நிலையில், வீடுகளை இழந்த 60 குடும்பங்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

நுவரெலியாவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதில் அனைத்து அரசாங்க அதிகாரிகளும் கவனம் செலுத்திவருவதாகவும் நுவரெலியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மலையக பிரதேசத்திலுள்ள  பல வீதிகள்  வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், மண்சரிவால் அங்கு சகதி ஏற்பட்டிருப்பதாகவும் நுவரெலியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். அத்துடன், வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்திருப்பதால் பல வீதிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பதாகவும் டி.குமாரசிறி தெரிவித்தார்.

நுவரெலியாவில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய அடை மழை பெய்துவரும் நிலையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் டி.குமாரசிறி கேட்டுக்கொண்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--