Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அடங்கிய குழுவில் அங்கம் வகிக்கும் 5 பேரை, அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20), கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுவளை தொகுதி அமைப்பாளரான சுசில் பிரேமஜயந்த, இரத்தினபுரி தொகுதி அமைப்பாளரான அநுர பிரியதர்ஷன யாப்பா, கடுகம்பொல தொகுதி அமைப்பாளரான டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, ஹக்மன தொகுதி அமைப்பாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஹபராதுவ தொகுதி அமைப்பாளரான சந்திம வீரக்கொடி ஆகியோரே, அமைப்பாளர் பதவியிலிருந்து இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago