2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சூதாடியவர் கைது

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில்,போலி நாணயத்தாள்களை கொண்டு சூதாட்டம் விளையாடிய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

75 போலியான 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் கொண்டு குறித்த நபர் சூதாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சூதாட்டத்தில் விளையாடுவதற்காக போலி நாணயத்தாள்களை பயன்படுத்த முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில்,அந்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பில் அறிந்துக் கொண்ட விடுதியின் முகாமையாளர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே கொள்ளுப்பிட்டி பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .