2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலை பஸ்ஸுக்கு சூடு: சமிந்த இலக்கு?

Thipaan   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சூட்டு சம்பவத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் தெமட்டகொட சமிந்தவும் காயமடைந்துள்ளார். இவர், முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பிரதானமானவராவார்.

வழக்கு விசாரணைக்களுக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துவந்துகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--