2021 மே 08, சனிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; வைத்தியருக்கு பிணை

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கரவனெல்ல வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.டி.எல். பெர்ணாந்துக்கு பிணை வழங்கி, ருவான்வெல்ல நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஏ.எஸ்.  புஷ்பகுமார, இன்று செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

குறித்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த ஆறு வயது சிறுமியை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமியின் தாய் வழங்கிய முறைப்பாட்டையடுத்து இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X