Thipaan / 2016 ஜூலை 13 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகிரியவுக்கு சுற்றுலா மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 8 பேர் உட்பட 14 பேர் குளவி கொட்டுக்கிலக்காகி கிம்புஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் ஆணொருவரும் 4 பெண்களும் 3 ஆண் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, உள்ளூர் சுற்றுலா பயணிகளில் 3 ஆண்களும் 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் வெளிநாட்டு பெண் ஒருவரும் உள்ளூர்வாசி ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
22 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
49 minute ago