2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதித் தேர்தல்: ஒரு மாதத்தில் 3,214 முறைப்பாடுகள்

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், ஒரு மாதத்தில் 3,214 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாகவே, அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ன என்றும் இவை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8ஆம் திகதி முதல் இன்று வரையான 31 நாட்களுக்குள், 3,214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,250 முறைப்பாடுகளும் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 964 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதன்படி, தேர்தல் சட்ட திட்டங்களை மீறியதாக 3,087 முறைப்பாடுகளும் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக 102 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .