Kamal / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனவரி மாதமளவில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறையலாமென தெரிவித்த உள்ளக அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல, உள்நாட்டிலிலும் எரிபொருள் விலை குறைவடையும் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட மேலும் தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிந்த பின்னர் நாட்டு மக்களுக்கு பல சலுகைகளை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். எரிபொருள் விலை குறையும் என்றும் கூறினார், யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, மஹிந்த அணிக்கு எரிபொருள் விலை குறைப்பு பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்றும் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் எரிபொருள் விலை உலகச் சந்தையில் குறைவடையலாமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
19 minute ago
28 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
52 minute ago