2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வருகிறார்

Super User   / 2010 ஜூன் 14 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய  விசேட தூதுவர் யசூசி அகாஷி  நாளை இலங்கைக்கான  விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில்,  இலங்கை வரும் யசூசி அகாஷி, அரசாங்க அதிகாரிகள், எதிர்த்தரப்பினரின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும்  கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்தது.

இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த மக்களின்  மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் யசூசி அகாஷி  கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் குறிப்பிட்டது.

மேலும், இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட சமாதானத்தை எட்டுவதற்கான அரசியல் தீர்வு தொடர்பில் யசூசி அகாஷி கலந்துரையாடவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் கூறியுள்ளது.

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு  விஜயம் செய்யவிருக்கும் யசூசி அகாஷி , வடக்கில் ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், இடம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் குறித்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

யசூசி அகாஷி யின் 20ஆவது இலங்கைக்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .