2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மன் பிரஜைகளிடம் கைவரிசை; சிறுவர்கள் இருவர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்,  ஏம்.எஸ்.எம்.நூர்தீன்

உல்லாசப் பிரயாணிகளாக, இலங்கைக்கு வந்திருந்த ஜேர்மனியைச் சேர்ந்த இருவரிடம், தங்களுடைய கைவரிசையைக் காண்பித்த, சிறுவர்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அந்தச் சிறுவர்கள் இருவரிடமிருந்தும் பெறுமதியான ​பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம்,  மட்டக்களப்பு, முகத்துவாரம் சவுக்கடி கடற்கரை பிரதேசத்திலேயே இன்று (17) இடம்பெற்றுள்ளது.

அந்தச் சிறுவர்களிடமிருந்து, சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் இரண்டு, 3 ஆயிரத்து 745 ரூபாய், மூக்குக்கண்ணாடி, கைப்பை என்பனவே மீட்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி பயின்றுவரும், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இருவர், விடுமுறையைக் கழிப்பதற்காக, மட்டக்களப்புக்கு வருகைதந்து, முகத்துவாரம் சவுக்கடி கடற்கரையில் நேற்று இருந்தபோதே, இவை திருடப்பட்டிருந்தன.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.டி. தீகவத்துருவவின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சிறுவர்கள் இருவரையும் கைதுசெய்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--