2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

‘ஞானசாரருக்கு ஐ.எஸ் குறி வைத்துவிட்டது’

Yuganthini   / 2017 ஜூன் 07 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கொலை செய்வதற்கான திட்டம், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அவ்வமைப்பு நேற்று(6) தெரிவித்தது.  

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் அதிகளவு ஆதிக்கத்தைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வமைப்பின் ஊடாக, கலகொட அத்தே ஞானசார தேரரைக் கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்தார். 

இராஜகிரியவில் உள்ள விகாரையொன்றில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொலை அச்சுறுத்தல் காணப்படுவதனால் தான், அவர் பொது நிக​ழ்வுகள், வாகனங்கள் என்பவற்றில் செல்லாமல் மறைந்து வாழ்கிறார்.  

பாதுகாப்பு அமைப்பும், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பது தொடர்பில், பொதுபல சேனாவுக்கு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், உயர்நீதிமன்றமும் ஞானசார தேரரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை. வாக்கு மூலம் ஒன்றைப் பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால், பிரபாகரனைக் கைது செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போது, சுமார் 200 பேர், அன்று ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோன்று 200 பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைத்து ஞானசார தேரரை கைது செய்ய முற்பட்டனர். அவர்களிடம் எந்தவொரு பிடியாணையும் இருக்கவில்லை  என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X