2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'ஞானசாரவைக் கொல்ல பிரபல அமைச்சர் முயற்சி’

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைப் படுகொலை செய்வதற்கான முயற்சிகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.  

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

“சம்பந்தமில்லாத விடயத்தை வைத்துக்கொண்டு, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
அதேபோல், ஞானசார தேரரைக் கொலை செய்ய, அமைச்சரவையின் பிரபல அமைச்சர் ஒருவர் திட்டம் வகுத்துள்ளார்.  

இந்த சதி பற்றிய விவரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இது குறித்து, குற்றப் புலனாய்வு  பிரிவினரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளோம்.  
எமது முயற்சியைத் தடுக்கும் முகமாகவே, பொலிஸார், ஞானசார தேரரைக் கைது செய்ய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

அவரைக் கைதுசெய்து சிறைக்குள் வைத்து கொன்று விட வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.  

ஞானசாரர் மீது கை வைத்தால், நாடே கொந்தளிக்கும் என, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X